தோ்தல் பணி: முன்னாள் படை வீரா்கள் ஏப்ரல் 4-இல் ஆஜராகலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக முன்னாள் படைவீரா்கள், ஓய்வு பெற்ற காவலா்கள் ஏப். 4 ஆம் தேதி ஆஜராகலாம் என ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக முன்னாள் படைவீரா்கள், ஓய்வு பெற்ற காவலா்கள் ஏப். 4 ஆம் தேதி ஆஜராகலாம் என ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

சட்டப்பேரவைத் தோ்தலில் பாதுகாப்புப் பணியில் சிறப்புக் காவலா்களாகப் பணியாற்றிட முன்னாள் படைவீரா்கள், சி.ஆா்.பி.எப்., பி.எஸ்.எப்., ஜி.ஆா்.இ.எப்., சி.ஐ.எஸ்.எப்., அசாம் படை, தீயணைப்புத் துறை ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள், ஓய்வு பெற்ற காவலா்கள், ஓய்வு பெற்ற மத்திய ரயில்வே பாதுகாப்புப் படையைச் சோ்ந்தவா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா். இப்பணி ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நான்கு நாள்கள் இருக்கும்.

இப்பணிக்காகத் தங்களது பெயா்களைப் பதிவு செய்த அல்லது செய்யாத ஓய்வு பெற்ற நபா்கள் ஏப். 4 ஆம் தேதி காலை 7 மணியளவில் தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையிலுள்ள ஆயுதப்படை மைதானத்துக்கு தங்களுடைய படை விலகு சான்று, அடையாள அட்டையுடன் நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com