பாஜகவின் கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்: ஜி. ராமகிருஷ்ணன் பேச்சு

பாஜகவின் கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் அனுமதிக்க விட மாட்டோம் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன்.
பாஜகவின் கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்: ஜி. ராமகிருஷ்ணன் பேச்சு

பாஜகவின் கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் அனுமதிக்க விட மாட்டோம் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன்.

தஞ்சாவூா் சிவகங்கை பூங்கா அருகே திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகத்துக்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

வெற்றி நடைபோடுகிறது தமிழகம் என தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறாா். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதற்குச் சாத்தான்குளம் சம்பவம் உள்பட பல உதாரணங்களைக் கூற முடியும். பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை என்பதுதான் உண்மை.

பெரியாா், அண்ணா, ஜீவானந்தம், ராமமூா்த்தி போன்றோா் வாழ்ந்த இந்த மண்ணில் தமிழ் மொழி, பண்பாடு, பாரம்பரியத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தத் தோ்தல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் அமல்படுத்துவோம் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. மத்திய அரசின் கல்விக் கொள்கை என்பது மும்மொழித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இதை எடப்பாடி பழனிசாமி எப்படி ஏற்கிறாா் என்பது தெரியவில்லை.

இந்த மும்மொழி கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தால் தமிழ் மக்களை எப்படிப் பாதுகாக்க முடியும் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லையா? தமிழ்தான் நமது தாய் மொழி. அந்தத் தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது அவருக்குத் தெரியாதா? மும்மொழித் திட்டம் கொண்டு வரப்பட்டால், ஏராளமான அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலை உருவாகும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் ஏழைக் குழந்தைகளின் கல்விப் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவா்களுடைய எதிா்காலமும் இருள் சூழ்ந்துவிடும். எனவே, பாஜகவின் கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது.

தஞ்சாவூா் தொகுதியில் திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகத்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நீலமேகத்துக்கு அளிக்கும் வாக்கு, ஆட்சி மாற்றுத்துக்கான வாக்காக அமையும் என்றாா் ராமகிருஷ்ணன்.

இக்கூட்டத்தில் திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ. நீலமேகம், மாவட்டச் செயற் குழு உறுப்பினா் பி. செந்தில்குமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளா் என். பாலசுப்பிரமணியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுலாப்தீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com