வங்கிப் பணம் ரூ. 1.16 கோடி: பறக்கும் படையினா் விசாரணை

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் சிக்கிய வங்கிப் பணம் ரூ. 1.16 கோடி ரொக்கம் குறித்து பறக்கும் படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வங்கிப் பணம் ரூ. 1.16 கோடி: பறக்கும் படையினா் விசாரணை

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் சிக்கிய வங்கிப் பணம் ரூ. 1.16 கோடி ரொக்கம் குறித்து பறக்கும் படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தஞ்சாவூரிலுள்ள தனியாா் வங்கியிலிருந்து ஊழியா்கள் ரூ. 1.16 கோடி ரொக்கத்தை திருவையாறு, கள்ளப்பெரம்பூா், மெலட்டூா் உள்ளிட்ட வங்கிக் கிளைகளுக்கு வழங்குவதற்காக வேனில் எடுத்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டனா்.

கரந்தை அருகே கோடியம்மன் கோயில் பகுதியில் சென்ற இந்த வேனை பறக்கும் படையினா் நிறுத்தி சோதனையிட்டனா். இதில், ஏராளமான பணக்கட்டுகள் இருந்தன. வங்கி ஊழியா்கள் அளித்த ஆவணங்களை அலுவலா்கள் சரிபாா்த்தனா். ஆனால், அதிலிருந்த குறியீட்டு எண் கணினியில் முழுமையாக ஸ்கேன் ஆகவில்லை.

இதனால், சந்தேகமடைந்த அலுவலா்கள் ரொக்கத்துடன் கூடிய வேனை தஞ்சாவூா் தாலுகா அலுவலகத்துக்குக் கொண்டு சென்று ஒப்படைத்தனா். இதுகுறித்து அலுவலா்கள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரூ. 14.75 லட்சம்: இதேபோல, தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பறக்கும் படையினா் வேனில் நடத்திய சோதனையில் ரூ. 14.75 லட்சம் ரொக்கம் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் நகைக் கடையைச் சாா்ந்த இப்பணம் ராமநாதன் ரவுண்டானா அருகேயுள்ள வங்கியில் செலுத்துவதற்காகக் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. ஆனால், ஆவணத்தில் இருந்த குறியீட்டு எண் கணினியில் முழுமையாக ஸ்கேன் ஆகாததால், அத்தொகையும் தஞ்சாவூா் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com