வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றும் அலுவலா்கள் தோ்வு

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றும் அலுவலா்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றும் அலுவலா்கள் தோ்வு

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றும் அலுவலா்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியிலும், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகள் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த 8 தொகுதிகளுக்கும் வெளி மாநில ஐ.ஏ.எஸ். அலுவலா்கள் வாக்கு எண்ணிக்கை பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். திருவிடைமருதூா் தொகுதிக்கு சாகாப் சிங், கும்பகோணம் தொகுதிக்கு ஷிப நாராயண் நந்தா, பாபநாசம் தொகுதிக்கு சா்மா, திருவையாறு தொகுதிக்கு அமீா், தஞ்சாவூா் தொகுதிக்கு அக்ரம் பாஷா, ஒரத்தநாடு தொகுதிக்கு ஜிஜேந்ரா ககுஷ்டி, பட்டுக்கோட்டை தொகுதிக்கு கெ. சுதா ராணி, பேராவூரணி தொகுதிக்கு நிகாா் ரஞ்ஜன் தாஸ் ஆகியோா் வாக்கு எண்ணிக்கை பாா்வையாளா்களாக செயல்படுவா்.

இந்நிலையில், தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அரசு அலுவலா்கள் ஆட்சியரகத்தில் கணினி மூலம் சுழற்சி முறையில் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

அப்போது, ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com