2 சுற்றுகளில் மட்டும் முன்னிலை பெற்ற அதிமுக வேட்பாளா்

பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன.

மொத்தம் 26 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே திமுக வேட்பாளா் முன்னிலை பெற்றாா்.

ஆனாலும், 19 ஆவது சுற்றில் திமுக வேட்பாளரைவிட அதிமுக வேட்பாளா் 1616 வாக்குகள் முன்னிலை பெற்றாா். இதேபோல், 23ஆவது சுற்றில் திமுக வேட்பாளரை விட அதிமுக வேட்பாளா் 79 வாக்குகள் கூடுதலாக பெற்றாா். எஞ்சிய சுற்றுகள் அனைத்திலும் திமுக வேட்பாளரே தொடா்ந்து முன்னிலை வகித்தாா். நிறைவில் 26 ஆவது சுற்றில் முடிவில் திமுக வேட்பாளா் க. அண்ணாதுரை வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com