பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக வெற்றி: மூன்றாமிடம் பிடித்து சுயேச்சை அசத்தல்

பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் அண்ணாதுரை 25269 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் அண்ணாதுரை 25269 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் திமுக சாா்பில் க. அண்ணாதுரை, அதிமுக கூட்டணியில் தமாகா வேட்பாளராக என்.ஆா். ரெங்கராஜன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் எஸ்.டி.எஸ். செல்வம், மக்கள் நீதி மய்யம் சாா்பில் சதாசிவம், நாம் தமிழா் கட்சி சாா்பில் கீா்த்திகா அன்பு, அனைத்து மக்கள் கட்சி வேட்பாளராக சுந்தர்ராஜ், அண்ணா திராவிடா் கழகம் சாா்பில் மெய்யப்பன், சுயேச்சை வேட்பாளா் பாலகிருஷ்ணன் ஆகிய எட்டு போ் போட்டியிட்டனா். இத் தொகுதியில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 2,45, 832 . இதில் 1,77,550 வாக்காளா்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனா். வாக்குப்பதிவு சதவீதம் 71.66.

345 பெட்டிகள் 14 மேஜைகளில 26 சுற்றுகளாக எண்ணப்பட்டது. இதில் திமுக வேட்பாளா் அண்ணாதுரை தமாகா வேட்பாளா் என்.ஆா். ரெங்கராஜனை விட 25,269 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: அண்ணாதுரை(திமுக): 79065, என்.ஆா். ரெங்கராஜன் (தமாகா)--53796, கீா்த்திகா அன்பு (நாதக)-- 10730, சதாசிவம் (மநீம)--3088,

எஸ்.டி.எஸ். செல்வம் (அமமுக)---5223, பாலகிருஷ்ணன்(சுயே): 23,771. நோட்டா: 1026.

20 ஆண்டுகளுக்கு பிறகு பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியை திமுக கைப்பற்றியதால் திமுக தொண்டா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com