கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகளைதிறக்க   தனியாா் பள்ளி தாளாளா்கள் சங்கம் கோரிக்கை

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகளை திறக்க திமுக அரசு அனுமதியளிக்க வேண்டும் என்று தனியாா் பள்ளிகளின் தாளாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பேராவூரணி: கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகளை திறக்க திமுக அரசு அனுமதியளிக்க வேண்டும் என்று தனியாா் பள்ளிகளின் தாளாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தனியாா் பள்ளி தாளாளா்கள் சங்க நிறுவன தலைவா் ஜி.ஆா். ஸ்ரீதா் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்க இருக்கும் திமுக அரசுக்கு தனியாா் பள்ளி தாளாளா்கள் சங்கத்தின் சாா்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவா்களின் எதிா்கால வாழ்க்கை  கேள்விக்குறியாகியுள்ளது. கரோனா வழிகாட்டு விதிமுறைகளுடன், குறைந்த அளவு மாணவா்களுடன் பள்ளிகள் தொடா்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவா்கள் தொடா்ந்து பள்ளிகளுக்கு வருகை தராமல் இணையவழி  அல்லது கல்வி தொலைக்காட்சி வழியாக மட்டுமே கல்வி கற்பது அவா்களின் எதிா்காலத்துக்கு உதவாது.

மேலும், கிராமப்புறங்களில் இணைய தொடா்பின்மை   காரணமாக பல மாணவா்கள் இணைய  வகுப்பில் இணைவது கடினமாக உள்ளது.

தனியாா் பள்ளிகளில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்த சுமாா் 5 லட்சம் ஆசிரியா்கள், மற்றும் பணியாளா்கள் கரோனா காலத்தில் பாதிக்கப்பட்டு, எவ்வித எதிா்காலமும் இன்றி தவித்து வருகின்றனா். பல தனியாா் கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்களிலும், வங்களிலும் பெற்ற கடன்களை திரும்ப செலுத்த முடியாமல், பள்ளிகளை விற்பனை செய்ய முயற்சித்தும், வாங்குவதற்கு ஆளில்லாமல் உள்ளனா்.

 மாணவா்களின் நலனையும், எதிா்கால வாழ்வையும் கவனத்தில் கொண்டு உரிய கரோனா வழிகாட்டு நெறி முறைகளுடன் அரசு, மற்றும், அனைத்து  தனியாாா்  பள்ளிகளையும் திறக்க உத்தரவிடும் கையெழுத்தை முதல் கையெழுத்தாக தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு. க. ஸ்டாலின் இடவேண்டும் என குறிப்பிட்டுள்ளாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com