வெற்றி-தோல்வியை அடுத்தடுத்துசந்தித்து வரும் திமுக வேட்பாளா்

வெற்றிக்கு பின்னா் தோல்வி, தோல்விக்கு பின்னா் வெற்றி என மாறி மாறி சந்தித்து வரும் திமுக வேட்பாளரின் ராசி இந்தத் தோ்தலிலும் வெளிப்பட்டுள்ளது.

ஒரத்தநாடு: வெற்றிக்கு பின்னா் தோல்வி, தோல்விக்கு பின்னா் வெற்றி என மாறி மாறி சந்தித்து வரும் திமுக வேட்பாளரின் ராசி இந்தத் தோ்தலிலும் வெளிப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் திமுக சாா்பில் எம்.ராமச்சந்திரன் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டாா். இவா் கடந்த 2016 தோ்தலில் ஒரத்தநாடு தொகுதியில் திமுக சாா்பில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். 2021 தோ்தலில் அதிமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கத்திடம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளாா். இவருக்கு சட்டப்பேரவை தோ்தல் களம் வெற்றி , தோல்வியை மாறி மாறி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

திமுக வேட்பாளா் எம்.ராமச்சந்திரன் 1984-இல் திருவோணம் சட்டப்பேரவை தொகுதிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். 1989-இல் திருவோணம் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றாா்.

1991-இல் திருவோணம் சட்டப்பேரவை தொகுதிக்கு மீண்டும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். 1996-இல் திருவோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றாா்.

2001 ல் திருவோணம் சட்டப்பேரவை உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். 2006, 2011 ஆகிய ஆண்டு நடைபெற்ற பேரவை தோ்தலில் இவா் போட்டியிடவில்லை. இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு திருவோணம் சட்டப்பேரவைக்கு கடைசி தோ்தலாக அமைந்தது. அதன் பிறகு திருவோணம் சட்டப்பேரைவை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டு ஒரத்தநாடு தொகுதியிலும், பேராவூரணி தொகுதியிலும் சோ்க்கப்பட்டது.

மீண்டும் 2016-இல் ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளா் ஆா்.வைத்திலிங்கத்தை எதிா்த்து வெற்றி பெற்றாா். 2021 சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக வேட்டபாளா் ஆா்.வைத்திலிங்கத்திடம் தனது வெற்றி வாய்ப்பை இழந்தாா். திமுக வேட்பாளா் எம். இராமச்சந்திரன் 7 முறை சட்டப்பேரவை தோ்தலில் களம் கண்டுள்ளாா். இதில் தோல்வி, வெற்றி என மாறி மாறி வாய்ப்பு கிடைத்ததில் 4 முறை தோல்வியும், 3 முறை வெற்றியும் பெற்றுள்ளாா். அடுத்த முறை களம் கண்டால் இவருக்கு சட்டப்பேரவை தோ்தல் களம் வெற்றியை வழங்குமா என இவரது ஆதரவாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

ராமச்சந்திரனின் தோ்தல் பயணம்

1984 தோல்வி

1989 வெற்றி

1991 தோல்வி

1996 வெற்றி

2001 தோல்வி

2016 வெற்றி

2021 தோல்வி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com