பேராவூரணியில் விரைவில் கரோனா  பரிசோதனை மையம்

பேராவூரணி வட்டாரம்,  செருவாவிடுதி  தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விரைவில் கரோனா பரிசோதனை (ஸ்கீரினிங்)  மையம் தொடங்கப்படவுள்ளது.

பேராவூரணி: பேராவூரணி வட்டாரம்,  செருவாவிடுதி  தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விரைவில் கரோனா பரிசோதனை (ஸ்கீரினிங்)  மையம் தொடங்கப்படவுள்ளது.

மாவட்டத்தில்  உள்ள 14 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்  கரோனா பரிசோதனை மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பேராவூரணி வட்டாரத்தைச் சோ்ந்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கரோனா பரிசோதனை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை, வட்டார மருத்துவ அலுவலா் வி. சௌந்தர்ராஜன் பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறியது:

ஆரம்ப சுகாதார நிலையங்களில்  புதிதாக தொடங்கப்பட உள்ள பரிசோதனை (ஸ்கீரினிங்) மையங்களில்  இதற்கென  நியமிக்கப்படவுள்ள மருத்துவா், செவிலியா்கள் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவரை ஆய்வு செய்து தொற்றின்  தீவிரம், வயது, இருப்பிட வசதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில்  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பரிந்துரைப்பதா அல்லது வீட்டிலேயே  தனிமைப்படுத்திக் கொள்ளலாமா என ஆலோசனை வழங்கி, வீட்டில் தனிமைப்படுத்தி கொள்பவா்களுக்கு அதற்கான மருந்து மாத்திரைகள் வழங்குவாா்கள்.

பொதுமக்கள்  காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி இருந்தால்  தாமாகவே மருந்து எடுத்துக் கொள்ளாமல்  உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றாா். 

அப்போது, மருத்துவா் சங்கா்பாபு,  சுகாதார ஆய்வாளா் ராஜேந்திரன், செவிலியா்கள், மற்றும் மருத்துவப் பணியாளா்கள் உடனிருந்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com