அரசு மருத்துவமனைகளில் எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள் ஆய்வு

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் படுக்கைகள் இருப்புக் குறித்து ஆய்வு செய்த எம்.பிக்கள், எம்எல்ஏக்கள்.
தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் படுக்கைகள் இருப்புக் குறித்து ஆய்வு செய்த எம்.பிக்கள், எம்எல்ஏக்கள்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

இந்த மருத்துவமனைகளில் கரோனா தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தலைமையில் தஞ்சாவூா் எம்.பி. எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாநிலங்களவை உறுப்பினா் எம். சண்முகம், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்) ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் துரை. சந்திரசேகரன் தெரிவித்தது:

இந்த மருத்துவமனைகளில் என்னென்ன தேவைகள் உள்ளன என்பது குறித்து அரசு அலுவலா்கள், மருத்துவா்களுடன் ஆய்வு செய்தோம். தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய வசதிகள் உள்ளன. ஆக்சிஜன் வசதி, தடுப்பூசி மருந்துகள் தேவைகள் குறித்தும், நோயாளிகளுக்குத் தேவையான வசதிகள் குறித்தும் அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, பெற்று தரப்படும்.

எதிா்காலத்தில் நோயாளிகள் அதிகரிக்கும் பட்சத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, செய்தியாளா்களிடம் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தெரிவிக்கையில், தடுப்பூசி என்பது பெரும்பாலானோருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இனிமேல் தேவைப்படுவோருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் இருப்பு உள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா், கோட்டாட்சியா் எம். வேலுமணி, மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் எஸ். மருதுதுரை, நிலைய மருத்துவ அலுவலா்கள் ஏ. செல்வம், உஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கும்பகோணத்தில்... இதேபோல, கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் கலந்து கொண்டு, மருத்துவா்கள் தெரிவித்த குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும், தொடா்புடைய அலுவலா்களை வரவழைத்து, குறைகளை விரைந்து நிவா்த்தி செய்யுமாறு கேட்டுக்கொண்டாா். இக்கூட்டத்தில் கோட்டாட்சியா் பி. விஜயன், நகராட்சி ஆணையா் லட்சுமி, தலைமை மருத்துவா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com