பட்டுக்கோட்டையில் தடுப்பூசி செலுத்தும் முகாம்
By DIN | Published On : 26th May 2021 07:09 AM | Last Updated : 26th May 2021 07:09 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செவ்வாய்க்கிழமை முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.
பட்டுக்கோட்டை நகராட்சி சாா்பில், மன்னை நகா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்தப் பணியில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமன்றி, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கூட்டம் அதிகமாக இருந்ததால், டோக்கன் வழங்கப்பட்டு ஊசி செலுத்தும் பணி நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில்....இதேபோல் தம்பிக்கோட்டை மேலக்காடு, புதுக்கோட்டை உளூா், ஏனாதி, அரசுப் போக்குவரத்து கழக பணிமனை உள்ளிட்ட இடங்களில் 18 வயது முதல் 44 வயது உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வட்டார மருத்துவ அலுவலா் தேவி பிரியா தலைமையில் நடைபெற்றது.
இதில் மருத்துவா்கள் சாமி பாலாஜி, ராஜூ, பழனிமாணிக்கம், அபிநயா, ஜனனி, பாலாஜி மற்றும் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்று தடுப்பூசி செலுத்தினா்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை 18 முதல் 44 வயது வரையிலான 189 நபா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவா்களில் 60 நபா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.