காய்கறிகள், பழங்கள் விற்பனைக்காக மாவட்ட அழைப்பு மையம் தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் வசதிக்காக காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கான மாவட்ட அழைப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் வசதிக்காக காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கான மாவட்ட அழைப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அ. ஜஸ்டின் தெரிவித்திருப்பது:

தளா்வுகளற்ற பொது முடக்கம் காரணமாக மாவட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை இணைந்து பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்களை அவா்களுடைய வசிப்பிடங்களிலேயே பெறும் வகையில் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைச் சந்தைப்படுத்தத் தேவை ஏற்படும்போது மாவட்டத் தோட்டக்கலை துணை இயக்குநரை 9943055896, வேளாண் வணிக துணை இயக்குநரை 9944669922 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும், விவசாயிகள், பொதுமக்கள் வசதிக்காக வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 04362 - 267679 என்ற மாவட்ட அழைப்பு மைய எண்ணில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்பு கொண்டு பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com