தில்லியில் 6 மாதங்களாகப் போராடும் விவசாயிகள்: மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

புதுதில்லியில் கடந்த 6 மாதங்களாகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசைக் கண்டித்தும் தஞ்சாவூா் மாவட்டத்தில்
தில்லியில் 6 மாதங்களாகப் போராடும் விவசாயிகள்: மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

புதுதில்லியில் கடந்த 6 மாதங்களாகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசைக் கண்டித்தும் தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சாா்பில் புதன்கிழமை வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் வணிக சட்டங்களுக்கு எதிராக, நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் போராடி வருகின்றனா். குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் தலைநகா் புதுதில்லியைச் சுற்றிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமா்ந்து, அறவழியில் போராடி வருகின்றனா்.

கடந்தாண்டு நவம்பா் மாதம் 26- ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம், புதன்கிழமையுடன் 6 மாதங்கள் நிறைவடைந்தது. மேலும், பாஜக அரசுப் பொறுப்பேற்ற மே 26 ஆம் தேதியை இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாகக் கடைப்பிடிக்க தில்லியில் போராடி வரும் அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டுக் குழுத் தீா்மானித்தது.

இதன்படி கரோனா பரவல் அதிகமுள்ள நிலையில், பொது முடக்க விதிகளைப் பின்பற்றி தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சாா்பில் வீடுகளில் புதன்கிழமை கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விவசாய சங்கங்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் மாவட்டத்தில் ஏராளமான இடங்களில் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

இதுபோல மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சாா்ந்த விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா்சங்கம், சிஐடியு, மாணவா் சங்கம், வாலிபா் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஏறத்தாழ 500 இடங்களில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் அருகே வாளாபுரம் கிராமத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் வயலில் இறங்கி, கருப்புக் கொடி ஏந்தி, முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒரத்தநாடு: ஒரத்தநாடு, பொன்னாப்பூா், ஒக்கநாடு கீழையூா், அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி, கருப்பு வில்லை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com