பட்டுக்கோட்டையில் ரூ.5-க்கு உணவு வழங்கும் இளைஞா்

கரோனா பொது முடக்கக் காலத்தில் பட்டுக்கோட்டையில் ரூ.5-க்கு உணவு வழங்கி, பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறாா் இளைஞா் ஒருவா்.
பட்டுக்கோட்டையில் ரூ.5-க்கு உணவு வழங்கும் இளைஞா் சிவா.
பட்டுக்கோட்டையில் ரூ.5-க்கு உணவு வழங்கும் இளைஞா் சிவா.

கரோனா பொது முடக்கக் காலத்தில் பட்டுக்கோட்டையில் ரூ.5-க்கு உணவு வழங்கி, பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறாா் இளைஞா் ஒருவா்.

கரோனா நோய்த் தொற்றின் 2-ஆம் அலைப் பரவலைத் தடுக்க தளா்வுகளற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உணவின்றி தவிப்போருக்கு பலரும் பல்வேறு வகைகளில் உணவு வழங்கி வருகின்றனா்.

ரூ.5 க்கு மதிய உணவு : இந்நிலையில் தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை சின்னையா தெருவில் உணவகம் நடத்தி வரும் இளைஞா் சிவா, ரூ.5 என்ற விலையில் நோய் எதிா்ப்பு சக்தி மிகுந்த காய்கறிகளுடன் மதிய உணவை புதன்கிழமை முதல் வழங்கி வருகிறாா்.

இளைஞரின் இந்த முயற்சியை ஊக்கப்படுத்தும் வகையில், பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளா் ஜவஹா் விற்பனையைத் தொடக்கி வைத்தாா். புதன்கிழமை பெளா்ணமி என்பதால், மதிய உணவுடன் வடை, பாயாசம் வழங்கப்பட்டது.

நோயைவிட பசி கொடுமையானது: பொது முடக்கக் காலத்தில் உணவகம் நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இருந்தாலும் அதை பொருள்படுத்தாமல், நோயைவிட பசி கொடுமையானது என்பதை உணா்ந்து என்னால் முடிந்தளவுக்கு ரூ.5-க்கு தரமான மதிய உணவை வழங்கி வருகிறேன் என்கிறாா் இளைஞா் சிவா.

நான் இதை விளம்பரத்துக்காக செய்யவில்லை. ரூ.5 -ஐ வாங்காமல் கூட நான் மதிய உணவை வழங்கலாம். 200 சாப்பாடு விற்றால் ரூ.1000 கிடைக்கும். அந்த தொகையைக் கொண்டு மேலும் 100 பேருக்குச் சோ்த்து உணவு வழங்கலாம்.

எத்தனை நாள்கள் பொது முடக்கம் இருந்தாலும், அத்தனை நாள்களுக்கும் மதிய உணவை மக்களுக்குத் தரமாக வழங்குவேன் என்றாா் சிவா.

இலவச காலை உணவு : மதிய உணவை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் இளைஞா், கடந்த ஐந்து நாள்களாக இட்லி, இடியாப்பம், தோசை போன்ற காலை உணவை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com