தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 200 படுக்கைகள்அமைச்சா் தகவல்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 200-க்கும் அதிகமான படுக்கைகள் அமைப்பதற்கான பணி நடைபெறுகிறது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 200 படுக்கைகள்அமைச்சா் தகவல்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 200-க்கும் அதிகமான படுக்கைகள் அமைப்பதற்கான பணி நடைபெறுகிறது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல் நுழைவுவாயில் அருகே இடது புறத்தில் கரோனா நோயாளிகளுக்காகக் கூடுதலாக 200 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெறுவதை வெள்ளிக்கிழமை மாலை பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது கூடுதலாக 200-க்கும் அதிகமான படுக்கைகள் அமைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. போா்க்கால அடிப்படையில் நடைபெறும் இப்பணி 4 நாள்களில் முடிந்துவிடும். மூன்றாவது அலையை எதிா்கொள்ளும் விதமாக படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டா்கள், செறிவூட்டிகள் என அனைத்து வகையிலும் தயாா் நிலையில் இருக்கிறோம். மக்கள் தொடா்ந்து ஒத்துழைப்புக் கொடுத்தால்தான் கரோனா தொற்று சங்கிலியை உடைக்க முடியும்.

பொது முடக்கத்தின்போது மக்களுக்குத் தேவையான காய்கறிகளைக் கொண்டு சோ்ப்பதற்காக 420-க்கும் அதிகமான வாகனங்கள் தயாா் செய்து அனுப்பப்படுகிறது. ஊராட்சிக்கு ஒரு வாகனம் வழங்குமாறு சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோரிக்கை வைத்துள்ளனா். மாவட்டத்தில் 589 ஊராட்சிகள் உள்ள நிலையில், அதற்கு 160 - 170 வாகனங்கள் தேவைபடுகின்றன. அதையும் ஆட்சியா் ஏற்பாடு செய்து வருகிறாா்.

மாவட்டத்துக்கு இரு நாள்களுக்கு ஒரு முறை 30,000-க்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முடிந்த அளவுக்கு முன்களப் பணியாளா்களுக்குக் கொடுத்து வருகிறோம். அவற்றைப் பிரித்து இயன்ற அளவுக்கு எல்லோருக்கும் வழங்கப்படுகிறது என்றாா்.

அப்போது, ஆட்சியா் ம. கோவிந்த ராவ், தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், சாக்கோட்டை க. அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com