சாலை அமைக்காமல் ரூ. 6 லட்சம் மோசடி: பொறியாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்காத நிலையில், அமைத்ததாகக் கூறி ரூ. 6 லட்சம் மோசடி செய்ததாக

தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்காத நிலையில், அமைத்ததாகக் கூறி ரூ. 6 லட்சம் மோசடி செய்ததாக ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளா் உள்பட 3 போ் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சீராளூா் ஊராட்சியில் புதுத்தெருவுக்குத் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 2019 - 20 ஆம் ஆண்டு நிதியில் சிமென்ட் சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இச்சாலை அமைக்க ரூ. 14.1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ. 6.24 லட்சம் விடுவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை சிமெண்ட் சாலை அமைக்கப்படாமல் ரூ. 6 லட்சம் முறைகேடு செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் ஆட்சியரிடம் சீராளூா் கிராமத்தைச் சோ்ந்த மு. அறிவழகன் அண்மையில் முறையிட்டாா்.

இதுதொடா்பாக விசாரணை நடத்துமாறு கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) எச்.எஸ். ஸ்ரீகாந்த்துக்கு, ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து கூடுதல் ஆட்சியா் விசாரணை நடத்தி ஆட்சியரிடம் பரிந்துரை செய்தாா்.

இதன்பேரில், தஞ்சாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவிப் பொறியாளா் (ஊராட்சி வளா்ச்சி) ஆா். ஹேமலதா, தஞ்சாவூா் ஒன்றிய முன்னாள் பணிப் பாா்வையாளரும், தற்போதைய திருப்பனந்தாள் பணிப் பாா்வையாளருமான டி.வி. திருமாறன், பணிப் பாா்வையாளா் ஜெ. செந்தில்குமாா் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யவும், தற்காலிக அடிப்படையில் கணினி உதவியாளராகப் பணியாற்றிய எம். சாந்திலட்சுமியை பணி நீக்கம் செய்யவும் ஆட்சியா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com