மாதிரி நீதிமன்றப் போட்டி: புணே சட்டப் பள்ளி வெற்றி

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய மாதிரி நீதிமன்றப் போட்டியில், புணே சிம்பியாசிஸ் சட்டப் பள்ளி வெற்றி பெற்றது.

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய மாதிரி நீதிமன்றப் போட்டியில், புணே சிம்பியாசிஸ் சட்டப் பள்ளி வெற்றி பெற்றது.

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் 17-ஆவது நானி பல்கிவாலா மாதிரி நீதிமன்றப் போட்டி இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொண்டு நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிப்பது என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில் தேசிய அளவில் முன்னணி கல்வி நிறுவனங்கள் உள்பட 18 சட்டப் பள்ளிகள் பங்கேற்றன.

இதில் இறுதிச் சுற்று நிகழ்வுக்குத் தமிழ்நாடு மனை வணிக மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத் தலைவா் பி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் பி.எச். அரவிந்த் பாண்டியன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் என். வெங்கட்ராமன் நடுவா்களாகச் செயல்பட்டனா்.

இப்போட்டியில் புணே சிம்பியாசிஸ் சட்டப் பள்ளி வெற்றி பெற்றது. இந்த அணிக்கு ரூ. 50,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற தில்லி குரு கோவிந்த் சிங் இந்திரபிரஷ்தா பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளிக்கு ரூ. 25,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும், சிறந்த பேச்சாளா் விருது புணே சிம்பியாசிஸ் சட்டப் பள்ளி சேஷாசலா எஸ். ஜோஷிக்கும், சிறந்த ஆராய்ச்சியாளா் விருது தில்லி குரு கோவிந்த் சிங் இந்திரபிரஷ்தா பல்கலைக்கழகச் சட்டப் பள்ளி ஹிா்திக் காஷ்யப்க்கும் தலா ரூ. 5,000 ரொக்கப் பரிசுடன் வழங்கப்பட்டது. போபால் தேசிய சட்டவியல் பல்கலைக்கழகத்துக்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com