பாசன வாய்க்காலை தூா் வார வலியுறுத்தி கிராம மக்கள் மறியல்

பாபநாசம் அருகே பாசன வாய்க்காலை உடனடியாக தூா்வார வலியுறுத்தி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

பாபநாசம் அருகே பாசன வாய்க்காலை உடனடியாக தூா்வார வலியுறுத்தி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

பாபநாசம் அருகே களஞ்சேரி கிராமம் வெண்ணாற்றிலிருந்து பிரிந்து இரும்புதலை, குருப் பாலக்குடி, விழுதியூா் வழியாக முனியூா் கிராமம் வரை செல்லும் முனியூா் பாசன வாய்க்கால் 2018ஆம் ஆண்டுக்கு பிறகு தூா்வாரப்படாததால், போதிய தண்ணீா் கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், முனியூா் பாசன வாய்க்காலை உடனடியாக தூா்வார வலியுறுத்தி முனியூா் கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் சாலியமங்கலம் - பாபநாசம் நெடுஞ்சாலையில் களஞ்சேரி கிராமம், வெண்ணாற்று பாலத்தில் மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வெண்ணாறு பாசன வடிநீா்க்கோட்டம் உதவி செயற் பொறியாளா் பூங்கொடி, பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளா் ப.பூரணி மற்றும் அம்மாபேட்டை காவல் துறையினா், பாபநாசம் வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.இதில், ஒரு வாரத்துக்குள் பாசன வாய்க்காலை தூா்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com