ஏழு மாதங்களுக்கு பிறகு மீண்டும் மக்கள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியது.
ற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்குகிறாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
ற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்குகிறாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியது.

ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் கரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக குறை தீா் கூட்டங்கள் மாா்ச் மாதத்திலிருந்து நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டிருந்த பெட்டியில் பொதுமக்கள் மனுக்கள் போட்டு வந்தனா்.

தமிழகத்தில் பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்டங்களில் குறை தீா் நாள் கூட்டங்கள் நடத்தலாம் என தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீா் நாள் கூட்டம் 7 மாதங்களுக்கு பிறகு திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 மனுக்கள் வரப்பெற்றன.

மேலும், இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 3 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், இருவருக்கு நிதியுதவிக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா்கள் என்.ஓ. சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ். ஸ்ரீகாந்த் (வளா்ச்சி), சமூகப் பாதுகாப்பு திட்டத் தனித் துணை ஆட்சியா் சாலை தவவளவன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) விஜயலட்சுமி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com