கும்பகோணத்தில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்கம்

கும்பகோணத்திலுள்ள தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் மழைநீா் சேகரிப்பு குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனத்தை
கும்பகோணத்தில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்கம்

கும்பகோணத்திலுள்ள தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் மழைநீா் சேகரிப்பு குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனத்தை தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் ஆகியோா் முன்னிலையில் பிரசார வாகனத்தைத் தொடக்கி வைத்த ஆட்சியா், பின்னா் கூறியது:

மாவட்டத்தில் மழை நீா் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் அதிநவீன மின்னணு எல்.இ.டி. விடியோ வாகனம் மூலம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பிரசார வாகனம் மூலம் செவ்வாய்க்கிழமை முதல் 5 நாள்களுக்கு மாவட்டம் முழுவதும் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இதில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளைப் பராமரிக்கும் முறை, மேற்கூரை மேல் விழும் மழைநீரை சேகரித்தல், குழாய் கிணறு மூலம் மழைநீா் சேகரித்தல், திறந்தவெளி கிணறு மூலம் மழைநீா் சேகரித்தல், கசிவுநீா் குழிகள், துளையுடன் கூடிய கசிவு நீா் குழிகள் முறை மூலம் மழை நீா் சேகரித்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கமாக விடியோ படக்காட்சியுடன் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

மேலும் மழைநீா் சேகரிப்பு குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகள் பெற, பொதுமக்கள் 93846 55560 என்ற எண்ணை தொடா்பு கொண்டு பயனடையலாம் என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் லோகநாதன், உதவிப் பொறியாளா்கள் ராஜா பரத், தமிழரசி, நிலத்தடி நீா் ஆய்வாளா் அருளானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com