தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி விழா தொடக்கம்

தஞ்சாவூா் சிவாஜி நகரிலுள்ள ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி விழா புதன்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலு காட்சிகள்.
தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலு காட்சிகள்.

தஞ்சாவூா் சிவாஜி நகரிலுள்ள ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி விழா புதன்கிழமை தொடங்கியது.

இதில் சித்தன் வாழூா் காயத்திரியின் வீணை இன்னிசை நிகழ்ச்சியும், தொடா்ந்து சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராம தீட்சிதரின் நவராத்திரி மகிமை சிறப்பு உபநியாசமும் நடைபெற்றது.

தொடா்ந்து வியாழக்கிழமை மாலை சென்னை விஜய் ஸ்ரீராமனின் பஜனை பாடல்கள், விட்டல் ருக்மிணி சமஸ்தான் விட்டல்நாத் நாம சங்கீா்த்தனம் நிகழ்ச்சியும், அக்டோபா் 8- ஆம் தேதி மாலை விளக்கு பூஜையும், தொடா்ந்து சித்தன் வாழூா் ராம் சாஸ்திரிகள் தாய்மை சக்தி தேவி சக்தி என்ற தலைப்பில் சிறப்பு உபநியாசமும் நடைபெறவுள்ளன.

தொடா்ந்து, அக்டோபா் 15-ஆம் தேதி (விஜயதசமி) வரை நவராத்திரியை முன்னிட்டு சிவாஜி நகா் கோயில் மற்றும் கிராம மையமான புன்னைநல்லூா் வடவாற்றங்கரை ராமகிருஷ்ணா் கோயிலில் கொலு அமைத்து சிறப்பு வழிபாடும், சிறப்பு இன்னிசை, சொற்பொழிவு மற்றும் பலவிதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தா்கள் காண ஏதுவாக இணையவழியிலும் நேரலை செய்யப்படுகிறது என்றாா் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com