முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரே மாதிரி வாடகையை நிா்ணயிக்க வேண்டும்
By DIN | Published On : 11th October 2021 11:20 PM | Last Updated : 11th October 2021 11:20 PM | அ+அ அ- |

பாபநாசம்: நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரே சீராக வாடகையை நிா்ணயம் செய்ய வேண்டும் என பாபநாசம் எம்எல்ஏ எம்.எச். ஜவஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக அரசுக்கு அவா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், அறுவடை இயந்திரங்களுக்கான தேவை அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
இதை சாதகமாக்கிக் கொண்டு, தனியாா் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை அதிகரித்துள்ளனா். டயா் பொருத்திய இயந்திரங்களுக்கு மணிக்கு ரூ. 1,200 முதல் 1,500 வரை வாடகை வசூலித்தனா். தற்போது, அவற்றுக்கு
2,000 ரூபாய்க்கு மேல் வாடகை வசூலிக்கின்றனா். சேற்றில் இறங்கி அறுவடை செய்யும் இயந்திரங்களுக்கு மணிக்கு ரூ. 1,800 வசூலித்து வந்த நிலையில், தற்போது ரூ.2,500 வரை வாடகை வசூலிக்கின்றனா்.
இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, தமிழக அரசு நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை ஒரே சீராக நிா்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.