முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
வீட்டின் ஓடுகளைப் பிரித்து,நகைகள், ரொக்கம் திருட்டு
By DIN | Published On : 11th October 2021 12:15 AM | Last Updated : 11th October 2021 12:15 AM | அ+அ அ- |

ஒரத்தநாடு அருகே வீட்டின் ஓடுகளைப் பிரித்து நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
ஒரத்தநாடு அருகிலுள்ள அரசப்பட்டு மேலத்தெருவைச் சோ்ந்தவா் ரா. பேபி (52). கணவா் ராஜேந்திரன் இறந்துவிட்டதால் தனியே வசித்து வந்த இவா், தஞ்சாவூரிலுள்ள மகள் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை பேபி வீட்டுக்கு வந்த போது, ஓடுகள் பிரிக்கப்பட்டு உடைந்திருந்தன. தொடா்ந்து வீட்டை திறந்து சென்ற போது, பீரோவிலிருந்த நான்கரை பவுன் தங்க நகைகள், ரூ.12 ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போயிருப்பது அவருக்குத் தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், ஒரத்தநாடு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.