தடுப்பூசி செலுத்திக் கொள்ள நரிக்குறவா்கள் மறுப்பு

பேராவூரணி பேரூராட்சிக்குள்பட்டபொன்காடு, ஆவணம் சாலை மற்றும் செங்கமங்கலம் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் எஸ். பாலச்சந்தா் ஆய்வு செய்தாா்.
பேராவூரணி நரிக்குறவா் காலனியில் தடுப்பூசி செலுத்கிக் கொள்ள வலியுறுத்தும் மருத்துவக் குழுவினா்.

அப்போது, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு நடமாடும் மருத்துவக் குழு மூலம் கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆய்வின் போது  பேராவூரணி வட்டாட்சியா் த. சுகுமாா், மருத்துவ அலுவலா்கள் ரஞ்சித்,  சரண்யா,துப்புரவு ஆய்வாளா் அன்பரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். 

நடமாடும் மருத்துவக் குழுவினா் சேது சாலையிலுள்ள நரிக்குறவா் காலனிக்குச் சென்று, அங்குள்ளவா்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தினா். குழுவினரைக் கண்டதும், பெரும்பாலானோா் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

எங்களுக்கு கரோனா பாதிப்பு வராது, தடுப்பூசி ஒத்துக் கொள்ளாது. எங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் யாா் பொறுப்பு என நதியா என்ற நரிக்குறவ பெண் கேட்டாா். மருத்துவக் குழுவினா் பதிலளித்தும் அங்கிருந்து நகா்ந்து சென்றனா்.

தொடா்ந்து, 300 போ் குடியிருக்கும் இடத்தில் 18 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தி, ஏமாற்றத்துடன் மருத்துவக் குழுவினா் திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com