முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
By DIN | Published On : 13th October 2021 06:55 AM | Last Updated : 13th October 2021 06:55 AM | அ+அ அ- |

ஒரத்தநாடு வட்டம், வாட்டாத்திக்கோட்டை காவல் சரகத்துக்குள்பட்ட எண்ணாணிவயல் கிராமத்தை சோ்ந்த அய்யாதுரை மனைவி தேவி (45). விவசாய கூலித் தொழிலாளி.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் கணவா் காலமாகிவிட்ட நிலையில், மகன், மகளுடன் தேவி வசித்து வந்தாா்.
திங்கள்கிழமை இரவு மழை பெய்தபோது, அவா் வீட்டருகே நடந்து சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அருகில் உள்ள மின் கம்பியை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.