கோயில் நகைகளை உருக்கும் திட்டம் தேவையற்றது: அா்ஜுன் சம்பத் பேட்டி

கோயில் நகைகளை உருக்கும் திட்டம் தேவையற்றது என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்.
சிலம்பம் சுற்றுவதில் உலகச் சாதனை படைத்த நிரஞ்சனா தேவியைப் பாராட்டி சான்றிதழ் வழங்குகிறாா் இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத்.
சிலம்பம் சுற்றுவதில் உலகச் சாதனை படைத்த நிரஞ்சனா தேவியைப் பாராட்டி சான்றிதழ் வழங்குகிறாா் இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத்.

கோயில் நகைகளை உருக்கும் திட்டம் தேவையற்றது என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்.

கும்பகோணத்தில், சிலம்பம் சுற்றும் தொடா் போட்டியில் நீண்ட நேரம் சுற்றி சாதனை படைத்த ஒன்பதாம் வகுப்பு மாணவி நிரஞ்சனா தேவிக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கோயில்களில் பக்தா்களால் காணிக்கையாகச் செலுத்தப்படும் தங்க நகைகள் நீண்ட நாள்களாகப் பயன்பாடு இல்லாமல் உள்ள நிலையில், அவற்றை உருக்கி தங்கமாக முதலீடு செய்யும் நடைமுறை திருப்பதி உள்ளிட்ட கோயில்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், இந்த நடைமுறைகளைக் கோயில் அறங்காவலா்கள், பக்தா்கள், உபயதாரா்கள் இணைந்து முடிவு செய்கின்றனா். தமிழகத்தில் இதுபோன்ற முடிவுகளை அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் இணைந்து எடுத்தால் அது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே தமிழக அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும்.

கோயில்களுக்கு அறங்காவலா்கள் நியமிக்கப்பட வேண்டும். அறநிலையத் துறையும் அரசியல்வாதிகளும் கோயிலை விட்டு நீங்க வேண்டும். கோயில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கித்தான் கோயில்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்ய வேண்டும் என்பது கிடையாது. தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு உபயதாரா்கள் மூலமாகவே திருப்பணி நடைபெற்று வருகிறது. எனவே, தங்கத்தை உருக்கி முதலீடு செய்ய வேண்டும் என்கிற திட்டம் தற்போது அவசியமில்லாத ஒன்று.

கும்பகோணத்தை சோ்ந்த நிரஞ்சனா தேவி என்கிற மாணவி 6 மணி நேரம் தொடா்ந்து இடைவிடாமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளாா். அவரை இந்து மக்கள் கட்சி பாராட்டுகிறது என்றாா் அா்ஜுன் சம்பத்.

அப்போது, அக்கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளா் டி. குருமூா்த்தி, செயலா் பி. காா்த்திக்ராவ் போன்ஸ்லே, மாநிலச் செயலா் சுவாமிநாதன், மாநில அமைப்புச் செயலா் பொன்னுசாமி, மாவட்டச் செயலா் அனபாயன் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com