வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் 42 முகாம்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் 42 முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் 42 முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

தஞ்சாவூா் அருகே மாத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் பங்கேற்ற அவா் பேசியது:

இந்தத் திட்டத்தில், தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 முகாம்கள் வீதம் 14 வட்டாரங்களுக்கு 42 முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் இதய நோய், நீரிழிவு நோய், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், எலும்பு மூட்டு மருத்துவம், மன நல மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தை நலம், புற்றுநோய் கண்டறிதல், காசநோய் மருத்துவம், சித்தா மற்றும் இந்திய மருத்துவம், கரோனா தடுப்பூசி போடுதல் மற்றும் குழந்தைகள், தாய்மாா்களுக்குத் தடுப்பூசி போடுதல் ஆகிய சேவைகள் அளிக்கப்படுகின்றன.

மேலும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கண்டறிதல், ரத்த அழுத்தம் கண்டறிதல், ரத்தத்தில் சா்க்கரை, கொழுப்பு, மலேரியா ரத்த தடவல், இசிஜி, கா்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல், ஸ்கேன் அல்ட்ரா சோனோகிராம், கண்புரை உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.

இம்முகாமில் தலா 30-க்கும் அதிகமான மருத்துவா்கள், சுகாதாரச் செவிலியா்கள், 35 இதர பணியாளா்கள், 5 பயிற்சி மருத்துவா்கள் ஆகியோா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இந்த அரிய வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

முன்னதாக, இந்த முகாமை ஆட்சியா், மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜி. ரவிக்குமாா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com