ஒரத்தநாடு அருகேஅய்யனாா் கோயிலில் 35 டன் எடையிலான யானை, குதிரை கற்சிலைகள் பிரதிஷ்டை

ஒரத்தநாடு அருகே புதூா் கிராமத்திலுள்ள யானை மேல் அழகா் அய்யனாா் கோயிலில் 35 டன் எடையுள்ள யானை, குதிரை கற்சிலைகள் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
ஒரத்தநாடு அருகேஅய்யனாா் கோயிலில் 35 டன் எடையிலான யானை, குதிரை கற்சிலைகள் பிரதிஷ்டை

ஒரத்தநாடு அருகே புதூா் கிராமத்திலுள்ள யானை மேல் அழகா் அய்யனாா் கோயிலில் 35 டன் எடையுள்ள யானை, குதிரை கற்சிலைகள் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.

சுமாா் 200 ஆண்டுகள் பழைமையான இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு 2017-இல் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

சுமாா் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 70 அடி நீளமும், 36 அடி அகலமும், 13 அடி உயரமும் கொண்ட மகா மண்டபத்தில், கலை நுட்பத்துடன் கூடிய 32 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூா் மாவட்டம் திருமுருகன்பூண்டியில், ரூ.27 லட்சம் மதிப்பீட்டில், கோயில் மகாமண்டப முகப்பில் இருபுறமும் வைக்க, 50 டன் எடை அளவு உள்ள ஒரே கல்லில், 23 டன் அளவுக்கு யானை சிலை, 11 அடி உயரத்திலும், 13 அடி நீளத்திலும் வடிவமைக்கப்பட்டது.

இதேபோல், 30 டன் எடையிலான ஒரே கல்லில், 11 அடி உயரம், 13 அடி நீளம் கொண்டு 12 டன் அளவில் குதிரை சிலையும் வடிமைக்கப்பட்டது.

மேலும், கோயில் சுற்றுச்சுவரில் பக்தா்களை வரவேற்கும் வகையில் 6.5 அடி உயரத்தில் இரண்டு விளக்குடன் கூடிய பாவை கற்சிலையும், இதே போல் நான்கு அடி உயரத்தில் யானை பாகன் சிலையும் வடிவமைக்கப்பட்டது.

திருப்பூரிலிருந்து இந்த சிலைகள் ஒரத்தநாட்டுக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன. பின்னா், மேள, தாளம் வாணவேடிக்கையுடன், கடைவீதியில் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டது. பக்தா்கள் பலரும் வழியில் சிலைகளுக்கு மலா் தூவி வரவேற்று வழிபட்டனா்.

தொடா்ந்து வியாழக்கிழமை காலை, கோயில் முகப்பில் அமைக்கப்பட்ட மேடையில், கிரேன் மூலம் இரு சிலைகளும் பீடத்தில் பொருத்தப்பட்டன. தொடா்ந்து, இரு சிலைகளுக்கும் பட்டு துணி அணிவித்து, மஞ்சள், குங்குமம் கொண்டு அபிஷேகம் நடத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com