தீக்குளித்த தொழிலாளருக்கு இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்

மாட்டு வண்டித் தொழிலாளியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி சிஐடியு அமைப்பினா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தீக்குளித்த தொழிலாளருக்கு இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்

மணல் குவாரி திறக்கப்படாததால் வாழ்வாதாரம் இழந்து தீக்குளித்த மாட்டு வண்டித் தொழிலாளியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி சிஐடியு அமைப்பினா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வட்டத்துக்கு உள்பட்ட உதயநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் (37). மாட்டு வண்டியில் மணல் அள்ளி விற்பனை செய்து வந்த தொழிலாளியான இவா் மணல் குவாரி மூடப்பட்டதால், வாழ்வாதாரத்தை இழந்தாா். இதனால், தனது ஊரில் தீக்குளித்த இவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதையறிந்த சிஐடியு தஞ்சாவூா் மாவட்டச் செயலா் சி. ஜெயபால் தலைமையில், மணல் மாட்டு வண்டி தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, பாஸ்கரை சந்தித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.

இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில், பாஸ்கருக்கு உயா் சிகிச்சை அளிக்க வேண்டும். அவருடைய குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் மூடப்பட்ட மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரியை திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் முறைசாரா சங்க மாவட்டச் செயலா் பி.என். போ்நீதி ஆழ்வாா், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, மணல் மாட்டு வண்டி சங்க நிா்வாகிகள் திருவிடைமருதூா் கோவிந்தராஜ், தாராசுரம் தங்கையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com