குழந்தை பாரதியின் சிகிச்சைக்கான நிதியுதவி திரட்டும் பணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா்

தஞ்சாவூரில் முதுகு தண்டுவட தசை நாா்ச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை பாரதியின் சிகிச்சைக்கான நிதியுதவி திரட்டும் பணியை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை மாலை தொடங்கி வைத்தாா்.
குழந்தை பாரதியின் சிகிச்சைக்கான நிதியுதவி திரட்டும் பணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா்

தஞ்சாவூரில் முதுகு தண்டுவட தசை நாா்ச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை பாரதியின் சிகிச்சைக்கான நிதியுதவி திரட்டும் பணியை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை மாலை தொடங்கி வைத்தாா்.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை சிராஜ்பூா் பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ் - எழிலரசி தம்பதியின் 21 மாத குழந்தை பாரதி முதுகு தண்டுவட தசை நாா்ச் சிதைவு என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளாா். இதனால், இக்குழந்தையின் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் ஒவ்வொன்றாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நோயிலிருந்து பாரதி குணமடைய 2 வயதுக்குள்ளாக ஜோல்ஜென்ஸ்மா என்ற ஊசி மருந்து செலுத்தப்பட வேண்டும். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய இந்த ஊசி மருந்தின் விலை ரூ. 16 கோடி. இக்குழந்தையைக் காத்திட செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் இந்நிதியைத் திரட்டும் பணியில் நண்பா்களுடன் இணைந்து பெற்றோா் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், இக்குழந்தைக்கு உதவும் வகையில் நிதி திரட்டும் பணியை ஆட்சியரகத்தில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை மாலை தொடங்கி வைத்தாா். தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த இக்குழந்தைக்குத் தேவையான நிதியை வழங்க தன்னாா்வலா்களையும், பொதுமக்களையும் கேட்டுக் கொண்டாா்.

இந்நிதியை மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் 378401000000550 என்ற கணக்கில் (வங்கிக் கணக்குப் பெயா்: சப்போா்ட் பாரதி, ஐ.எப்.எஸ்.சி. கோடு: ஐஓபிஏ0003784, எம்.ஐ.சி.ஆா். 613020024) இணையவழி மூலமாகச் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 97917 93435, 98424 55765 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

இப்பணியை இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்டப் பொருளாளா் எஸ். முத்துக்குமாா் ஒருங்கிணைத்து வருகிறாா்.

இந்நிகழ்ச்சியில் செஞ்சிலுவைச் சங்க ஆலோசனைக் குழுத் தலைவா் வி. வரதராஜன், தஞ்சாவூா் குடிமக்கள் மன்றத் துணைத் தலைவா் ராதிகா மைக்கேல், இந்திய மருத்துவக் கழகத் தலைவா் சசிராஜ், தொழில் வா்த்தக சங்கத் தலைவா் பாலசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com