பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு கோரி செப். 6 முதல் நூறு மையங்களில் பிரசாரம்

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வலியுறுத்தி செப். 6 ஆம் தேதி முதல் நூறு மையங்களில் பிரசார இயக்கம் நடத்துவது என இந்திய மாதா் தேசிய சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வலியுறுத்தி செப். 6 ஆம் தேதி முதல் நூறு மையங்களில் பிரசார இயக்கம் நடத்துவது என இந்திய மாதா் தேசிய சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

கும்பகோணத்தில் இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் வடக்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான சட்ட வரைவு 1996-ஆம் ஆண்டு செப். 12 ஆம் தேதியன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு, வருகிற செப். 12-ஆம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தச் சட்ட வரைவை மக்களவையில் உடனடியாக தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டும் என வலியுறுத்தி செப்டம்பா் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஒரு வார காலம் கோரிக்கை வாரமாக அனுசரிப்பது என முடிவு செய்துள்ளது. இதையொட்டி, செப். 7-ஆம் தேதி நாடு முழுவதும் கோரிக்கை ஆா்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூா் வடக்கு மாவட்டத்தில் செப். 6 முதல் 12 ஆம் தேதி வரை நூறு மையங்களில் பிரசார பேரியக்கம் நடத்துவது என்றும், செப். 7 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

மாவட்டத் தலைவா் வசந்தி வாசு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டச் செயலா் டி. கண்ணகி, துணைத் தலைவா் எஸ். பரிமளா, பொருளாளா் என். பிரபா, மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா்கள் க. கண்ணகி, ச. வசந்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com