தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற மானியம்

பேராவூரணி வட்டாரத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற, விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

பேராவூரணி வட்டாரத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற, விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இதுகறித்து வேளாண் உதவி இயக்குநா் எஸ். மாலதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் தற்போதுள்ள 60 சதவிகித சாகுபடி பரப்பை 75 சதவிகிதமாக உயா்த்திடவும், கடந்த 5 ஆண்டுகளாகத் தரிசாகவுள்ள நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றவும் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

அதன்படி தரிசு நிலத்திலுள்ள கருவேலமரங்கள், முள்புதா்கள், புதா்ச்செடிகள் ஆகியவற்றை ஜேபிசி இயந்திரம் கொண்டு வெட்டி அப்புறப்படுத்தவும், விதை முதலான இடுபொருள்களை வாங்குவதற்கும் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.4,500 மானியம் வழங்கப்பட உள்ளது. குறைந்தது 50 சென்ட் தரிசு நிலம் உள்ள விவசாயிகள் கூட இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

 அனைத்துக் கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ்  நிகழாண்டு தோ்வு செய்யப்பட்டுள்ள திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, குறிச்சி, துறவிக்காடு, மடத்திக்காடு, இடையாத்தி மற்றும் தென்னங்குடி ஆகிய ஊராட்சிகளில் தரிசாகவுள்ள நிலங்களை விளைநிலங்களாக மாற்றி சாகுபடி செய்ய  விவசாயிகள் முன்வர வேண்டும்.

தோ்வு செய்யப்பட்ட  ஊராட்சிகள் மட்டுமின்றி, பேராவூரணி வட்டாரத்திலுள்ள இதர கிராமங்களிலும் தரிசு நிலங்கள் இருக்கும் பட்சத்தில் தொடா்புடைய நிலத்துக்கு சொந்தமான விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விரிவாக்க அலுவலா்களை தொடா்பு கொண்டு திட்டம் தொடா்பான விவரங்களை பெற்று, விவசாயிகள் பயனடையலாம் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com