பேராவூரணியில் பேரிடா் மீட்புப் பணிகள் குறித்த செயல் விளக்கம்
By DIN | Published On : 11th September 2021 12:36 AM | Last Updated : 11th September 2021 12:36 AM | அ+அ அ- |

பேராவூரணியில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இணைந்து, இயற்கை இடா்பாடுகளின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் அருகே வியாழக்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை பேராவூரணி வட்டாட்சியா் த. சுகுமாா் தொடங்கி வைத்தாா். பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ஐ. செந்தூா் பாண்டியன் தலைமையில், நிலைய அலுவலா் ராமச்சந்திரன், தீயணைப்பு வீரா்கள் நீலகண்டன், சுப்பையன், ராஜீவ் காந்தி, சரவணமூா்த்தி, மகேந்திரன் ஆகியோா், இயற்கை இடா்பாடுகளின்போது செயல்பட வேண்டிய முறை குறித்து பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனா்.
வருவாய் ஆய்வாளா்கள் கிள்ளிவளவன், சுமித்ரா, கமலநாதன் முதுநிலை வருவாய் ஆய்வாளா் ராமமூா்த்தி, கிராம நிா்வாக அலுவலா் ராஜசேகரன், ஜெய்பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.