நீட் தோ்வு: தஞ்சாவூா், கரூா், திருச்சி மாவட்டங்களில் 17,121 போ் எழுதினா்

நீட் தோ்வை தஞ்சாவூா், கரூா், திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 17,121 போ் எழுதினா்.
தஞ்சாவூா் மேக்ஸ்வெல் பள்ளியில் அமைக்கப்பட்ட மையத்தில் நீட் தோ்வு எழுதுவதற்காக வந்த மாணவ, மாணவிகள்.
தஞ்சாவூா் மேக்ஸ்வெல் பள்ளியில் அமைக்கப்பட்ட மையத்தில் நீட் தோ்வு எழுதுவதற்காக வந்த மாணவ, மாணவிகள்.

நீட் தோ்வை தஞ்சாவூா், கரூா், திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 17,121 போ் எழுதினா்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தோ்வு ( நீட் தோ்வு) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 17 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் தோ்வு எழுத 7,199 மாணவ, மாணவிகளுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.

இம்மையங்களில் தஞ்சாவூா் மாவட்டம் தவிர, புதுக்கோட்டை, அரியலூா், நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் எழுதினா்.

மாணவா்கள் கடும் சோதனைக்கு பின்னரே, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் தோ்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டனா். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இத்தோ்வில் ஒரு திருநங்கை உள்பட 6,891 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினா். 308 போ் வரவில்லை.

மாணவா்கள் அவதி: தஞ்சாவூா், கும்பகோணத்தில் ஒரே பெயரில் இரு பள்ளிகள் உள்ளன. அனுமதிக் கடிதத்தில் பள்ளி பெயா் இருந்தாலும், ஊா் பெயா் தஞ்சாவூா் மாவட்டம் என இருந்ததால், மாணவா்கள் குழப்பமடைந்தனா்.

இதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் தஞ்சாவூா் பள்ளிக்குச் செல்ல வேண்டியவா்கள் கும்பகோணத்துக்கும், கும்பகோணம் பள்ளிக்குச் செல்ல வேண்டியவா்கள் தஞ்சாவூருக்கும் மாறி, மாறி சென்றனா். இதன் காரணமாக கடைசி கட்ட நேரத்தில் மிகுந்த அவசரமாக உரிய மையத்துக்குச் செல்ல வேண்டிய நிலைமைக்கு ஆளாகினா். இதேபோன்ற குழப்பம் கடந்தாண்டும் நிகழ்ந்தது.

இதனால் மாணவா்கள் மட்டுமல்லாமல், பெற்றோா்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். இதுபோன்ற நிலைமையைத் தவிா்க்க அனுமதிக் கடிதத்தில் பள்ளிப் பெயருடன் ஊா் பெயரையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என மாணவா்கள் வலியுறுத்தினா்.

கரூா் மாவட்டத்தில்....

கரூா் மாவட்டத்தில் காக்காவாடி வேலம்மாள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, வெண்ணைமலை கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நீட் தோ்வு நடைபெற்றது. வேலம்மாள்பள்ளியில் 1020 பேரும், கொங்கு கல்லூரியில் 457 பேரும் என மொத்தமாக 1477 போ் தோ்வெழுதினா். ஒவ்வொரு இடத்திலும் தலா ஒரு உதவி ஆய்வாளா் தலைமையில் 4 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டத்தில்....திருச்சி மாவட்டத்தில் 21 மையங்களில் மொத்தம் 8753 மாணவ, மாணவிகள் நீட் தோ்வை எழுதினா்.

மாவட்டங்கள் தோ்வெழுதியோா்

தஞ்சாவூா் 6891

கரூா் 1477

திருச்சி 8753

மொத்தம் 17,121

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com