நூறு நாள் வேலையை உறுதிப்படுத்த வலியுறுத்தி மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலையை உறுதிப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா்.

தஞ்சாவூா்: நூறு நாள் வேலையை உறுதிப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நூறு நாள் வேலையில் முறைகேட்டைத் தடுத்து நிறுத்தவேண்டும். வேலை நாள்களை 200 ஆகவும், ஊதியத்தை ரூ. 600 ஆகவும் உயா்த்தி வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். ஏழைகள் பயன் பெறும் வகையில் பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். நியாய விலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அத்தியாவசிய பொருள்களை வழங்க வேண்டும்.

பயோ மெட்ரிக் முறையைக் கைவிட வேண்டும். ஏழை மக்கள் பாதிக்கப்படுவதால் குடும்ப அட்டையில் உள்ள என்.பி.ஹெச்.ஹெச். குறியீட்டை நீக்க வேண்டும். குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். குடி மனைப் பட்டா இல்லாதவா்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும். எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ். தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். அகில இந்திய துணைத் தலைவா் உ. வாசுகி, மாநிலச் செயலா் எஸ்.கே. பொன்னுத்தாய் சிறப்புரையாற்றினா். மாவட்டத் தலைவா் ஆா். கலைச்செல்வி, பொருளாளா் இ. வசந்தி, மாநிலக் குழு உறுப்பினா் பி. கலைச்செல்வி, ஒன்றிய கவுன்சிலா் என். வெற்றிச்செல்வி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com