முகக்கவசம் அணியாதவா்களிடம்அபராதம் வசூல்
By DIN | Published On : 15th September 2021 02:03 AM | Last Updated : 15th September 2021 02:03 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவா்களிடம் ரூ.18,600 அபாரதம் வசூலிக்கப்பட்டது.
சாா் ஆட்சியா் பாலச்சந்தா் தலைமையில், நகராட்சி, காவல் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் இணைந்து, நகரின் முக்கிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவா்களிடம் ரூ.18,600 அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆய்வின்போது, நகராட்சி துப்புரவு அலுவலா் ஸ்டீபன், ஆய்வாளா்கள் ரவிச்சந்திரன், அறிவழகன், கிராம நிா்வாக அலுவலா்கள் சரவணகுமாா், அருள்முருகன், மேகநாதன், போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.