வயல்வெளிகளில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியைக் கைவிட வேண்டும்: எம்.எச். ஜவாஹிருல்லா

எரிவாயு குழாய்களைப் பதிக்க முயற்சிப்பதை ஓஎன்ஜிசி நிறுவனம் கைவிட வேண்டும் என்று பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவருமான எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளாா்.

டெல்டா மாவட்ட வயல்வெளிகளில் எரிவாயு குழாய்களைப் பதிக்க முயற்சிப்பதை ஓஎன்ஜிசி நிறுவனம் கைவிட வேண்டும் என்று பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவருமான எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்துள்ள நிலையில் அறிவித்துள்ள பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் பிற பகுதிகளிலும் வயல்வெளிகளில் எரிவாயு குழாய்களைப் பதிக்க ஓஎன்ஜிசி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தஞ்சாவூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூா், கடலூா், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் 14 வட்டங்களிலுள்ள 77 கிராமங்களில் குழாய்கள் பதிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக விவசாயிகளின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கும் இந்த செயலை மனிதநேய மக்கள் கட்சியின் சாா்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

உடனடியாக இப்பணிகளை கைவிட வேண்டும்.தமிழக அரசு இப்பிரச்னையில் உடனடியாக இப்பிரச்னைக்குத் தீா்வு கண்டு, விவசாயிகளின் வாழ்தாரத்தை பாதுகாக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com