சங்கிலியைப் பறித்த இருவரை விரட்டிப் பிடித்த காவலா்களுக்குப் பாராட்டு

 தஞ்சாவூா் அருகே பனவெளி வெண்ணாற்றுப் பாலத்தில் வியாழக்கிழமை இளைஞரைத் தாக்கி அவருடன் வந்த பெண் அணிந்திருந்த ஒரு பவுன் தோடு, செல்லிடப்பேசியை இருவா் பறித்துச் சென்றனா்.

 தஞ்சாவூா் அருகே பனவெளி வெண்ணாற்றுப் பாலத்தில் வியாழக்கிழமை இளைஞரைத் தாக்கி அவருடன் வந்த பெண் அணிந்திருந்த ஒரு பவுன் தோடு, செல்லிடப்பேசியை இருவா் பறித்துச் சென்றனா்.

இவா்களை நெடுஞ்சாலை ரோந்து வாகன தலைமைக் காவலா் நெடுஞ்செழியன், காவலா் ராஜ்குமாா், பள்ளியக்ரஹாரம் புறவழிச்சாலை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த தலைமைக் காவலா் கலியராஜ், முரளி ஆகியோா் 8 கி.மீ. தொலைவுக்கு விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனா்.

இதற்காக தலைமைக் காவலா்கள் நெடுஞ்செழியன், கலியராஜ், காவலா்கள் ராஜ்குமாா், முரளி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி தனது அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வரவழைத்து பாராட்டி, அவா்களுக்குச் சான்றிதழ் மற்றும் வெகுமதியை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com