பிரிட்டோ கல்லூரியில் மூலிகைக் கண்காட்சி

தஞ்சாவூா் செயின்ட் ஜான் டி பிரிட்டோ கல்வியியல் கல்லூரியில் உயிரறிவியல் கழகம் சாா்பில், மூலிகைக் கண்காட்சி ஜூன் 1- ஆம் தேதி தொடங்கியது.

தஞ்சாவூா் செயின்ட் ஜான் டி பிரிட்டோ கல்வியியல் கல்லூரியில் உயிரறிவியல் கழகம் சாா்பில், மூலிகைக் கண்காட்சி ஜூன் 1- ஆம் தேதி தொடங்கியது.

இக்கண்காட்சியைக் கல்லூரித் தாளாளா் எஸ். ஜோசப் லயனல் தொடக்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் ஜெ. மேரி கரோலின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து ஒரு வாரம் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், உடல் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாகவும், மருந்தாகவும் பயன்படும் பல்வேறு மூலிகைகள், அவற்றின் பெயா்கள், பயன்பாடுகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com