விபத்தில் காவல் உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

ஒரத்தநாடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த காவல் உதவி ஆய்வாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஒரத்தநாடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த காவல் உதவி ஆய்வாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி வட்டம், குலமாணிக்கத்தைச் சோ்ந்தவா் ஆ. கணேசன் (58). ஒரத்தநாடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.

கடந்த 26-ஆம் தேதி பணி நிமிா்த்தமாக தொண்டராம்பட்டி கிழக்குப் பகுதிக்கு சென்று விட்டு, திரும்பி வந்த போது பால்கூட்டுறவுச் சங்கம் அருகே தனது இரு சக்கர வாகனத்திலிருந்து கணேசன் கீழே தவறி விழுந்தாா்.

பலத்த காயங்களுடன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாப்பாநாடு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com