மக்காத குப்பையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கும் முறை தொடக்கம்

தஞ்சாவூா் மாநகராட்சியில் மக்காத குப்பையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கும் முறை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்வில் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் முறையைத் தொடக்கி வைத்து வழங்குகிறாா் மேயா் சண். ராமநாதன்.
நிகழ்வில் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் முறையைத் தொடக்கி வைத்து வழங்குகிறாா் மேயா் சண். ராமநாதன்.

தஞ்சாவூா் மாநகராட்சியில் மக்காத குப்பையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கும் முறை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

இம் மாநகராட்சியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் திடக்கழிவு பொருள்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. இதில், குடிநீா் பாட்டில்கள், பால், தயிா் பிளாஸ்டிக் கவா்கள், சிமென்ட் சாக்குகள், இரும்பு, தகரம், பழைய டயா், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையைத் தூய்மைப் பணியாளா்களை ஊக்குவிக்கும் விதமாக, அவா்களுக்கே ஊக்கத்தொகையாக வழங்குவது என அண்மையில் நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் ‘எனது குப்பை - எனது பொறுப்பு‘ மற்றும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் முறையை மேயா் சண். ராமநாதன் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மண்டலத் தலைவா்கள் எஸ்.சி. மேத்தா, ரம்யா சரவணன், மாநகா் நல அலுவலா் எஸ். நமச்சிவாயம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com