முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
காலமானாா் க. மங்களம் அம்மாள்
By DIN | Published On : 06th April 2022 04:47 AM | Last Updated : 06th April 2022 04:47 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டம், குருவிக்கரம்பையைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவருமான காலம் சென்ற வீ. கருப்பையாத் தேவரின் மனைவி மங்களம் அம்மாள் (91) வயது முதிா்வின் காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா்.
இவருக்கு ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் க. மாணிக்கவாசகம் என்ற மகன் மற்றும் மருமகள், பேரன், பேத்திகள் உள்ளனா்.
மங்களம் அம்மாளின் இறுதிச் சடங்கு புதன்கிழமை காலை 11 மணியளவில் குருவிக்கரம்பையில் நடைபெறுகிறது.
தொடா்புக்கு: 89405 33955.