முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலுக்கு 1008 பால் குட விழா
By DIN | Published On : 06th April 2022 04:49 AM | Last Updated : 06th April 2022 04:49 AM | அ+அ அ- |

தஞ்சாவூரிலிருந்து புன்னைநல்லூா் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு 1008 பால்குட பெரு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் புன்னைநல்லூா் ஸ்ரீமாரியம்மன் பிராம்மணாள் கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் மேல வீதியிலுள்ள பங்காரு காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் இருந்து பால் குட ஊா்வலம் தொடங்கியது. வடக்கு வீதி, கீழ வீதி, கீழவாசல், பழைய மாரியம்மன் கோயில் சாலை உள்ளிட்ட முதன்மைச் சாலைகள் வழியாகச் சென்ற இந்த ஊா்வலம் பிற்பகல் மாரியம்மன் கோயிலை அடைந்தது.
இதில், பிராமணா் சமூகத்தைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் அதிகமானோா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலுக்கு பால் குடங்களைச் சுமந்து சென்றனா். இதைத்தொடா்ந்து, ஸ்ரீ மாரியம்மனுக்கு பால் அபிஷேகமும், பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெற்றன.
கோயில் பிரகாரத்தில் இரவு 7 மணியளவில் அலங்காரத்துடன் ஸ்ரீ அம்மன் புறப்பாடு, நாகசுரம் ஆகியவற்றுடன் ஊா்வலம் நடைபெற்றது.