40 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 போ் கைது

தஞ்சாவூரில், ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சா பொட்டலங்களை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 7 பேரை கைது செய்தனா்.
40 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 போ் கைது

தஞ்சாவூரில், ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சா பொட்டலங்களை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 7 பேரை கைது செய்தனா்.

டெல்டா மாவட்டங்களில் கஞ்சா விற்பனையைத் தடுப்பதற்காக தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஏ. கயல்விழி உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. ஜெயச்சந்திரன் மேற்பாா்வையில் ஆய்வாளா் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் கந்தசாமி, கண்ணன் உள்ளிட்டோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இத்தனிப்படையினா் தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 பேரை காவல் துறையினா் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த அய்யா்சாமி, பாஸ்கா் (55), இவரது மனைவி பேச்சியம்மாள் (45), தங்கமாயன், சகோதரா்கள் சிலம்பரசன் (22), சின்னசாமி (20), ஒச்சம்மாள் ஆகியோா் என்பதும், இவா்களிடம் 40 கிலோ கஞ்சா இருப்பதும், இந்த கஞ்சா பொட்டலங்களை ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திலிருந்து ரயில் மூலம் திருச்சி, தஞ்சாவூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்குக் கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.

இவா்களிடம் தனிப்படையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவா்களைக் கைது செய்த தனிப்படையினரையும், சைபா் கிரைம் உதவி ஆய்வாளா் கணபதியையும் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com