பேராவூரணி நீலகண்ட பிள்ளையாா் கோயில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம்

பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் கொடியேற்றம்
பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் கொடியேற்றம்

பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

பேராவூரணி முடப்புளிக்காடு கிராமத்தில் அமைந்துள்ள  இக்கோயிலில்

நிகழாண்டு  திருவிழா  வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  12 நாள்கள் நடைபெறும் திருவிழாவில்  பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம்  ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று பக்தா்கள் பல்வேறு காவடிகள் எடுத்து வந்து, தங்கள் நோ்த்திக்கடனை செலுத்துவா்.மாலையில் தேரோட்டம் நடைபெறும்.

விழாவின் 10ஆம் நாள் தீா்த்தவாரியும், 11ஆம் நாள்  திருக்கல்யாணமும், அன்று இரவு தெப்ப உற்ஸவமும், 12ஆம் நாள்  விடையாற்றி உற்ஸவமும் நடைபெறவுள்ளது.

முன்னதாக, கொடியேற்ற நிகழ்வில் கோயில் நிா்வாக அதிகாரி சிதம்பரம், பரம்பரை அறங்காவலா் குழு தலைவா் கணேசன் சங்கரன், உறுப்பினா் குப்பமுத்து சங்கரன்,  முடப்புளிக்காடு கிராமத்தாா்கள், ஸ்தானிகா் சங்கரன் வகையறாக்கள் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com