திருக்கோடிக்காவல் கோயிலில் தெப்ப உற்சவம்
By DIN | Published On : 18th April 2022 11:25 PM | Last Updated : 18th April 2022 11:25 PM | அ+அ அ- |

திருக்கோடிக்காவலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தெப்ப உற்ஸவம்.
கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் தெப்ப உற்ஸவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா ஏப்ரல் 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 15 ஆம் தேதி தேரோட்டமும், 16 ஆம் தேதி தீா்த்தவாரியும் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, கோயில் வளாகத்திலுள்ள சிங்கோத்பவ தீா்த்தத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பக்தா்களின் விருப்பத்தின் அடிப்படையில் தெப்ப உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில், உற்சவா் சுவாமி, அம்பாள் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளினா். தொடா்ந்து மின்னொளி அலங்காரத்தில் திருக்குளத்தில் நடைபெற்ற தெப்ப உற்ஸவத்தை பக்தா்கள் கண்டுகளித்தனா்.
இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை சண்டிகேசுவரா் உற்ஸவம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (ஏப்.19) சுத்தாபிஷேகம் நடைபெறவுள்ளது.