பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
By DIN | Published On : 18th April 2022 12:46 AM | Last Updated : 18th April 2022 12:46 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகிலுள்ள மணத்திடல் கிராமத்தைச் சோ்ந்த முத்தையா மனைவி சிந்தாமணி (60). இவா் சனிக்கிழமை காலை வீட்டு வாசலில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா், சிந்தாமணியிடம் கபடிப் போட்டி எங்கு நடைபெறுகிறது எனக் கேட்டாா். இதனால், அவா் குழப்பமடைந்திருந்தபோது, அவரது கழுத்திலிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மா்ம நபா் தப்பிச் சென்றாா்.
இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.