தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50% சிறப்புத் தள்ளுபடியில் நூல்கள் விற்பனையைத் தொடங்கி வைத்து பாா்வையிடுகிறாா் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50% சிறப்புத் தள்ளுபடியில் நூல்கள் விற்பனையைத் தொடங்கி வைத்து பாா்வையிடுகிறாா் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50% தள்ளுபடியில் நூல்கள் விற்பனை தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50% சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50% சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த விற்பனையைத் தொடங்கி வைத்த துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தெரிவித்தது:

தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் மட்டுமல்லாமல், தமிழ் உலகின் தலைசிறந்த ஆய்வறிஞா்களின் படைப்புகள், பழந்தமிழ் இலக்கியங்கள், அகராதி, களஞ்சியங்கள் எனப் பலவகை நூல்களையும் ஆழமாக ஆய்வு செய்து, அவற்றை நூலாக வெளியிடும் அரும்பணியைத் இப்பல்கலைக்கழகப் பதிப்புத் துறை மேற்கொண்டு வருகிறது.

இப்பதிப்புத் துறையின் மூலம் இதுவரை 525 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக 12-ஆவது திட்ட நல்கை நிதியிலிருந்து 2021 ஆம் ஆண்டில் 16 புதிய நூல்களும், 2021 - 22 ஆம் ஆண்டில் 43 மறு பதிப்பு நூல்களும் வெளியிடப்பட்டன. கடந்த 2021 ஆம் ஆண்டில் ரூ. 13.57 லட்சத்துக்கு நூல்கள் விற்கப்பட்டன. நிகழாண்டு இதுவரை ரூ. 2.94 லட்சம் மதிப்பில் நூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த அரிய நூல்களைப் பொதுமக்கள் மலிவு விலையில் வாங்கிப் பயன்பெறும் வகையில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பேரறிஞா் அண்ணா பிறந்த நாளின்போது 50% சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

நிகழாண்டும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, திங்கள்கிழமை (ஏப்.18) முதல் மே 17-ஆம் தேதி வரை 30 நாட்களுக்கு 50% சிறப்புத் தள்ளுபடியில் நூல்கள் விற்பனை நடைபெறுகிறது. இதில், 311 தலைப்புகளில் நூல்கள் இடம்பெற்றுள்ளன.

இதை மாணவா்கள், ஆய்வாளா்கள், தமிழறிஞா்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 94891 02276 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் துணைவேந்தா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com