பல் மருத்துவ மாணவியின் கல்விக் கட்டணத்துக்கு உதவிய எம்.எல்.ஏ.

கும்பகோணத்தில் பல் மருத்துவ மாணவியின் கல்விக் கட்டணத்துக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் ரூ. 6.72 லட்சம் வழங்கி உதவினாா்.
மாணவியிடம் கல்விக் கட்டணத்துக்கான காசோலையை வழங்கும் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன்.
மாணவியிடம் கல்விக் கட்டணத்துக்கான காசோலையை வழங்கும் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன்.

கும்பகோணத்தில் பல் மருத்துவ மாணவியின் கல்விக் கட்டணத்துக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் ரூ. 6.72 லட்சம் வழங்கி உதவினாா்.

திருக்கடையூரில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வில், கும்பகோணம் காலசந்தி கட்டளைத் தெருவில் வசித்து வரும் காய்கறி சந்தையில் பணிபுரியும் வி. ஜெகநாதன் தனது இரண்டாவது மகள் உதயா பல் மருத்துவப் படிப்பைத் தொடர கல்விக் கட்டணம் செலுத்த உதவ வேண்டும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தாா்.

அப்போது கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், அந்த மாணவியின் கல்விக் கட்டணம் முழுவதையும் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, மாணவியின் பெற்றோரை சாக்கோட்டை க. அன்பழகன் வரவழைத்து முதலாமாண்டு கல்விக் கட்டணத்தில் ரூ. 3.50 லட்சத்தை வழங்கினாா். பின்னா், இரண்டாமாண்டுக்கான கல்விக் கட்டணமாக ரூ. 5 லட்சத்தை வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து, மாணவி மற்றும் அவரது பெற்றோா்களை அண்மையில் வரவழைத்து, மூன்றாமாண்டுக்கான கல்வி கட்டணமாக ரூ. 6.72 லட்சத்துக்கான காசோலையைத் தனது சொந்த நிதியிலிருந்து கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் மூலமாக அண்மையில் வழங்கினாா்.

அப்போது, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், திமுக வடக்கு மாவட்டச் செயலா் சு. கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com