உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாது: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
களிமேடு கிராமத்தில் மின் விபத்துக்குள்ளான தேரை பார்வையிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
களிமேடு கிராமத்தில் மின் விபத்துக்குள்ளான தேரை பார்வையிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தஞ்சாவூர்: உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் மின் விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு புதன்கிழமை ஆறுதல் தெரிவித்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

இந்த சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்தது. தமிழக முதல்வர்  காலை 5 மணிக்கெல்லாம் எங்களையும், அதிகாரிகளையும் அனுப்பி நிகழ்விடத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அவரது அணுகுமுறை எந்த அளவுக்குச் சிறப்பான முறையில் இருக்கிறது என்பதை பார்க்கலாம். அதிகாலை 3 மணிக்கு சம்பவம் நிகழ்ந்தாலும் உடனடியாக பொறுப்பு அமைச்சரையும் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு பேசி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் கேள்விப்பட்டவுடன் தமிழக முதல்வர் மனது தாங்காமல் எங்களை முன்னே செல்லுமாறு கூறிவிட்டு அவரும் வந்து கொண்டிருக்கிறார். நடக்கக்கூடாத சம்பவங்கள் நடந்து விட்டது. எங்களால் என்ன செய்ய முடியுமோ தமிழக முதல்வர் செய்வார்.

அதிமுகவின் குற்றச்சாட்டுகளை நாங்கள் குற்றச்சாட்டுகளாகப் பார்க்கவில்லை. இறந்திருக்கிற சின்ன உயிராக இருந்தாலும், பெரிய உயிராக இருந்தாலும் மிகப்பெரிய இழப்பாக பார்க்கிறோம். இன்னும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என கருதுகிறோம். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றார் அமைச்சர்.

அப்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை, டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com